(எம்.எம்.ஜபீர்)
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அம்பாரை மாவட்டத்தில் தையல் போதனா ஆசிரியர்கள், மேற்பர்வையாளர்கள் மற்றும் காவலாளிகள் என  45 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை  சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள தையல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இத்திட்டம் இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழில் வாய்பினை உருவாக்கும் நோக்கில்  தையல் பயிற்ச்சியியை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக  கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான   றிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் உருவான இத்திட்டம்  ஆடைகள் மற்றும் குடிசைக் கைத்தொழில் நிறுவகத்தின்  ஊடாக  செயற்படுத்த வேண்டுமென்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் அயராத முயற்சியினால் அம்பாரை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலுக்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிகழ்வு சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சின்; புடவை மற்றும் ஆடை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் லங்கா சதோச  நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது தொழில் பயிற்சி அதிகார சபையின் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர், பொறியியலாளர் எம்.வீ.ஏ.நளீம், ஒய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். பீர்முகம்மது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா, கௌரவ கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளரும் ,அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான  சீ.எம்.ஹலீம் அதேபோன்று  அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸின் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளரும் மைஹோப் நிறுவனத்தின் பணிப்பாளருமான சீத்தீக் நதீர் மற்றும் சாய்ந்தமருது மத்திய குழு தலைவர் எஸ்.டீ.கபீர், கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைசேனை, பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி, மத்தியமுகாம், நற்பிட்டிமுனை, மருதமுனை ஆகிய  பிரதேசங்களுக்கான  கட்சியின் அமைப்பாளர்களும் ஏனை கட்சியின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர். 


கருத்துரையிடுக

 
Top