கடந்த 2014 ஆம் ஆண்டு  நடை பெற்ற கல்விப் பொதுத் தராதர  சாதாரண பரீட்சையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகதுகுட்பட்ட நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் 42 வீதமான மாணவர்கள் தமிழ் பாடத்தில் சித்தியடையவில்லை என தெரிய வருகின்றது .

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு 50 மாணவர்கள்  கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். . இதில் 21 மாணவர்கள் தமிழ் பாடத்தில் சித்தியடையவில்லை .அதே போன்று 46 மாணவர்கள் ஆங்கில பாடத்திலும் ,18 மாணவர்கள் கணித பாடத்திலும் 22 மாணவர்கள் விஞ்ஞான பாடத்திலும் ,11 மாணவர்கள் வரலாறு பாடத்திலும் சித்தியடைய வில்லையென  கல்முனை  வலயக் கல்வி அலுவலகத்தினால் வெளியிடப் பட்டுள்ள  பரீட்சை ஒப்பீட்டறிக்கையில்  தெரிவிக்கப் பட்டுள்ளது.


கருத்துரையிடுக

 
Top