பொது இடங்களில் வழங்கப்பட்டுள்ள இலவச இணையதள வசதியை கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனி ஆகியவற்றில் பயன்படுத்துவது தொடர்பான விபரங்களை 1919 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான  (ICTA) தெரிவித்துள்ளது.
 
இலவச இணையதள வசதி கடந்த வாரம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
கொழும்பு கோட்டை ரயில் நிலையம்- பொது மற்றும் தனியார் பஸ் நிலையம்- கண்டி ஸ்ரீ தலதா மாளிகை- கொழும்பு மிதக்கும் சந்தை- கொழும்பு சட்டக்கல்லூரி- கொழும்பு பொது நூலகம்- தெஹிவலை மிருகக்காட்சிசாலை- பொலன்னறுவை பிரதான வைத்தியசாலை- மாத்தறை பஸ் நிலையம்- பொலன்னறுவை ரயில் நிலையம்- மாத்தறை ரயில் நிலையம் உட்பட நாட்டின் 26 பொது இடங்களில் இவ்விணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
 
ஒரு நபருக்கு விநாடிக்கு 512  கிலோபைட் வேகத்தில் மாதத்திற்கு 100 மெகாபைட் அளவுடைய இணையதள வசதி இலவசமாக பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனம் தெரிவித்தது.
 
தொலைதொடர்பு சீராக்கல் ஆணைக்குழு உட்பட நாட்டின் பிரதான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கப்பட்டுள்ளது.
 
இலவச இணையதள வசதியை நாட்டின் 1000 இடங்களில் உருவாக்குவது தற்போதைய அரசின் நோக்கமாகும். தென்னாசிய நாடுகளின் இவ்வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஒரே நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top