புத்தாண்டை முன்னிட்டு, நுகர்வோர் அதிகார சபையினரால் கிழக்கு மாகாணத்தில் 183 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் இந்த விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 51 கடைகளும், மட்டக்களப்பில் 65 கடைகளும், திருகோணமலையில் 69 கடைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான விசேட சுற்றிவளைப்புக்கள் எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்கப்படும் என அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

 
Top