கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியில்இன்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 12  கடைகள் எரிந்து சாம்பலாகின 
கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இன்று மாலை 4.00 மணியளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.  கல்முனை மாநகர சபை அருகாமையில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு மாநகர சபை தீ அணைப்பு படையினர் விரைந்து உடன் செயற் பட்டிருந்தால்  இந்த அனர்த்தமும் தவிர்க்கப்  பட்டிருக்கும்  என வர்த்தகர்கள் தெரிவித்தனர் .
கடைகள்  எரிந்த பிற்பாடே  அவ்விடத்துக்கு தீ அணைப்பு  படையினர் சென்றிருந்தனர். இதற்கான காரணம் மாநகர சபை தீ அணைப்பு பிரிவு  ஆரம்பிக்கப் பட்டும்    அவர்கள் உசார் நிலையில் இருக்காமையே. . அவர்கள் உசார் நிலையில் இல்லாததனால்தான்  தீப்பிடிக்கும் இடங்களுக்கு மாநகர ஆணையாளரும் செல்லவேண்டியுள்ளது.
கிழக்கில் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கும் கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியில் சுமார் 500 பெரிய கடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய கடைகளும் இயங்கி வருகின்றன.. பகல் வேளையில் இந்த சம்பவம்  இடம் பெற்றதனால்  பொது மக்கள் பொலிசாரின் உதவியுடன்  மாநகர தீ அணைப்பு  படையினாரால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப் பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

 
Top