எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

 1983ஆம் ஆண்டு தொடக்கம் கடத்தப்பட்டு காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்டவர்களின் முறைப்பாடுகளை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான விசாரணை  இன்று செவ்வாய்க்கிழமை (07) 02ஆவது நாளாக கல்முனையில்  தொடர்கின்ற அதேவேளை, அதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்   இன்று 02ஆவது நாளாக தொடர்கின்றது. ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, நேற்று தொடக்கம் இன்றுவரை 212  பேர் பதிவு செய்யப்பட்டிருந்த அதே நேரம் புதிதாக இன்றுவரை 64 பேர் பதிவு செய்து சாட்சியமளிக்க விண்ணப்பித்துள்ளனர் என பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏற்கெனவே பதிவு செய்த அனைவரும் இன்று சாட்சியமளிக்க அனுமதிக்கப்படுவர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கருத்துரையிடுக

 
Top