காணாமற் போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை நடாத்தப்பட்டது.

போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை நீதியை தேடித்தராது என்று குறிப்பிட்டும், காணாமற் போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

 கல்முனை  தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக திரண்ட, காணாமற் போனோரின் உறவுகள், பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழு ஆக்கப் பட்டோருக்கான  செயற்பாட்டுக் குழுவின்  அனுசரணையுடன்  மாணவர் மீட்பு பேரணி ஏற்பாடு செய்த  இந்த அமைத்கிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள்  கல்முனை வடக்கு வைத்திய சாலை முன்பாக இருந்து ஒரு பிரிவினரும் கல்முனை இராம கிருஷ்ண மிசன் வித்தியாலயம் முன்பாக இருந்து  மற்றைய குழுவினருமாக  பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர் . 

அமைதி ஊர்வலத்தில் சென்றவர்கள்  பக்க சார்பற்ற நீதி தேவை? ,அரசே எமக்கு பதில் தா ? , எங்கள் பிள்ளைகளை எங்களிடம் அனுப்பி வை ?, நாங்கள் படும் வேதனைக்கு பதில் தாருங்கள் ?, என் கணவரை என்னிடம் ஒப்படையுங்கள் ? எங்கள்  பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்  என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றடைந்து  வீதி ஓரத்தில் உறவுகளை தேடிய கூட்டமும் நடை பெற்றது.

கூட்டத்தின் முடிவில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு மாணவர் மீட்ப்பு பேரவையின் தலிவர் எஸ்.கணேசினால் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் மகஜர் கையளிக்கப் பட்டது.கருத்துரையிடுக

 
Top