ஏ.பி.எம்.அஸ்ஹர்

  புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக  வழங்கப்படவுள்ள போஷாக்கு உணவு தொடர்பாக அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயலமர்வொன்று இன்று  அம்பாரையில் நடை பெற்றது.

அம்பாரை மாவட்ட செயலகத்தில்  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் தலைமையில்       நடை பெற்ற இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கலந்து கொண்டு இத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதில் அம்பாரை மற்றும் கல்முனைப் பிராந்தி சுகாதார பிரதிப் பணிப்பாளர்கள் பிரதேச செயலாளர்கள் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் குடும்ப சுகாதார உத்தியோத்தர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்


கருத்துரையிடுக

 
Top