அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தமிழ்  மொழி பயன்பாட்டு உரிமையை  உறுதிப்படுத்துமாறு கோரி கல்முனை அபிவிருத்தி போரம் அம்பாரை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்கவிட்ம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 அம்பாரை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக துசித பீ வணிகசிங்க நியமிக்கப்டுள்ளதோடு இவர் தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதையடுத்து கல்முனை அபிவிருத்தி போரத்தின் தலைவர் அஷ்ஷெய்கு ஏ.பி.எம்.அஸ்ஹர் அனுப்பி  வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்படி வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
 அதில்மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது.கேகாலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக்கடமையாற்றிய நீங்கள் அமபாரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்க்கத்தக்கதாகும்.ஏற்கனவே மூவின சமூகங்கள் வாழும்பிரதேசத்தில் கடமையாற்றிய அனுபவங்கள் உங்களுக்கு இருந்தாலும் அம்பாரை மாவட்டத்தில் கடமையாற்றக்கிடைத்தமை நிச்சயமாக உங்களுக்குக்கிடைத்த பாக்கியம் என்பதை எதிர்காலத்தில்  நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நாம் நம்புகிறோம். பிரட்மன் வீரகோன் போன்ற சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் இம்மாவட்டத்தில் கடமையாற்றிய பின்னர்தான்  பிரதமர்களின் செயலாளர்களாக மாறினர் என்பது வரலாறாகும்.

நேற்று முதல் இம்மாவட்த்தின் உன்னதமான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.இம்மாவட்டத்தை சகல துறை களிலும் அபிவிருத்தி செய்ய வழிகாட்டுவது ஆலோசனைகள் வழங்குவதும் உங்கள் மீதுள்ள கடமையாகும் மூவின சமுகங்களுக்கும் அந்தந்த சமூகங்களுக்கு பாதகமில்லாமல் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது உங்கள் மீது  இம்மாவட்த்திலுள்ள சகல மக்களும் நம்பிக்கை வைக்க சந்தர்ப்பமாக அமையும்.

இதே வேளை இம்மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களில் கரையோரப்பிரதேசங்களிலுள்ள 13 பிரதேச செயலகங்ளிலும் தமிழ் மொழி அரச கரும மொழியாகப்பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இங்கு கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் இப்பிரதேச செயலகங்களின் கீழ் வாழும் 3லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தமிழ் மொழியை  தாய் மொழியாகவும் அரச கரும மொழியாகவும் பயன்படுத்தி வரும் நிலையில் அம்பாரை மாவட்ட செயலகத்திலிருந்து வரும் கடிதங்கள்  மற்றும் சுற்று நிருபங்கள் அநேகமானவை தனிச்சிங்களத்திலேயே வருகின்றன.இதனால் இப்பிரதேச அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் 
மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்நடை முறைச்சிக்கல் தொடர்பாக முன்னர் கடமையாற்றிய அரசாங்க அதிபரிட்ம  பல முறை சுட்டிக்கா்ட்டப்பட்டும் எதுவித ஆக்கபுரவமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்  இருப்பினும் நீங்கள் இந்நடைமுறையை நீக்கி தமிழ் மொழியிலேயே கருமமாற்றுவதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள மாவட்ட செயலகத்திலுள்ள மற்றும் மாவட்ட செயலகத்திற்கு வெளியிலுள்ள  திணைக்கள்த்லைவர்களுக்கு நீங்கள் கண்டிப்பான  உத்தரவுகளை வழங்க வேண்டும் எனவும் இது விடயத்தில் உங்களது உத்தரவினை உதாசீனப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க பின்னிற்கக்கூடாது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top