ஏ.பி.எம்.அஸ்ஹர்


பாவனையாளர் பாதுகாப்பு விதிகளை மீறும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறை வேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி துல்கர் நயீம் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின்  கிழக்கு மாகாண அதிகாரிகளுடனான சந்திப்பு அண்மையில் அம்பாரை மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாணத்திற்கான  உதவிப்பணிப்பாளர் எச்.எல்.குத்துஸ் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் அதிதியாகக்கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்
 அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.கடந்த ஆட்சியின் போது பொருட்களின் விலை உச்சத்தில் காணப்பட்டது.மக்களின்  அன்றாட வாழ்க்கைச் சுமையை சமாளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முக்கிய பாவனைப் பொருட்களின் விலைகள் தேர்தல் வாக்குறுதிகளின் படி கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.இருந்த  போதிலும் பெருமளவிலான வர்த்தக நிலையங்களிலும் உள்ளுர் வியாபார நிலையங்களிலும் கட்டுப்பாட்டு விலையையும் மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்தும் பொதுமக்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. வர்த்தமானி மூலம் குறிப்பிட்ட பொருட்களின் புதிய கட்டுப்பாட்டு விலைகள் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் இவ்வாறு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பொது மக்கள் புதிய அரசின் மீது அதிருப்தியுறும் நிலை தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.ஆகையால் பாவனையாளர் விதிகளை மீறி பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க நாடு முழுவதிலுமுள்ள எமது அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை கட்டுப்பாட்டு விலைய மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் பாவனையாளர்களின் பார்வைக்கு  புதிய விலைப்பட்டியலை உரிய முறையில் காட்சிப்படுத்தாத வியாபார நிலையங்களை திடீர் முற்றுகையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு இதன் போது பனிப்புரை விடுத்தார்.
 கட்டுப்பாட்டு விலைய மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களின் பார்வைக்கு  புதிய விலைப்பட்டியலை உரிய முறையில் காட்சிப்படுத்தாத வியாபார நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளை  1977 எனும் தொலை பேசி இலக்கத்திற்கு  தெரியப்படுத்த முடியும்.

கருத்துரையிடுக

 
Top