அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட்

புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் நடை பெறப் போகும் பொதுத் தேர்தலுக்கான  தேர்தல் மாற்ற முறை குறித்து தேசியக் கட்சிகளும் ,அரசாங்கமும் அவசரம் காட்டக் கூடாது. 
இந்த தேர்தல் திருத்தமானது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விடயம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரு பொறி முறையை உருவாக்க வேண்டும் என  சிறுபான்மை கட்சிகளுக்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட்  அழைப்பு விடுத்தார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட் இதனை தெரிவித்தார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கல்முனையில் இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட் தலைமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கடசியின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சீ.எம்.முபீத், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம்இ அம்பாறை மாவட்ட கட்சி இணைப்பாளர் ஏ.எம்.லத்தீப் மருதமுனை நாவிதன் வெளி இணைப்பாளர் சித்தீக் நதீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  

கருத்துரையிடுக

 
Top