(பி.எம்.எம்.ஏ.காதர்)

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் அரபு மொழி பீடம் நடாத்திய இரண்டாவது சர்வதேச ஆய்வு  மாநாடு அண்மையில் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.மஸாஹிர் தலைமையில்   நடைபெற்றது. 

மொழிகள் மதங்கள் கலாசாரம் சமூகத்தின் ஊடாக தேசிய அபிவிருத்திக்கான வலுவூட்டல் எனும் தொனிப் பொருளில் இந்த ஆய்வு  மாநாடு  நடைபெற்றது. இதில் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் 42 பேர்  ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.இந்தியா,மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மெய்யில் துறை பேராசிரியரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவருமான எம்.எஸ்.எம்.அனஸ்  இம்மாநாட்டின் பிரதான உரையை நிகழ்தினார்.பிரதான பேச்சாளர் பற்றிய அறிமுக உரையை சிரேஷ்ட விரிவுரையாளரும் மாநாட்டின் இணைப்பாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் நிகழ்த்தினார்.நன்றி உரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெசீல் நிகழ்தினார். 

மேலும் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.மஸாஹிர், சிரேஷ்ட விரிவுரையாளர்களான மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன்  ஏ.பி.எம்.அலியார் ,கலாநிதி  எம்.ஐ.எம்.ஜெசீல், எம்.எச்.எம்.நைறூஸ், எம்.எச்ஏ.முனாஸ்,  ஏ.எம்.றாஸிக் ஆகிய ஏழு பேரின் தலைமையில் ஏழு அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இம்மாநாட்டில் பிரதான பேச்சாளராக் கலந்து கொண்ட முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும் பேராசிரியருமான  எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களுக்கு இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.மஸாஹிர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இங்கு பல்கலைக்கழக விரிவரையாளர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலை 8.30மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை இந்த மாநாடு நடைபெற்றது 

கருத்துரையிடுக

 
Top