கல்முனை பிரதேசத்தில் அரசியல் புள்ளியொன்று தொழில் மற்றும் உதவிகள் வழங்குவதாக தெரிவித்து கைலஞ்சம்  பெறுவதாக கூறப் படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில்  இம்முறை அரசியலில் களமிறங்கவுள்ள  முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரால் நியமிக்கப் பட்ட அதிகாரி ஒருவரே  இவ்வாறு  களமிறங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
 அக்கட்சியின் தலைவரின் பெயரை பயன் படுத்தி குறித்த அதிகாரி 250 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரையிலான  பணத்தை மக்களிடமிருந்து அறவிடுவதாகவும் தெரிய வருகிறது.

மேலும் இவர் அரச தொழில் பெற்று தருவதாகவும் கூறி பணம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன . இவ்வாறான நடவடிக்கையினால் அந்த கட்சியின் தலைவரது மானம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளதுடன்  பலரும் இந்த அதிகாரியை இழிவாக பேசுகின்றனர் .

சம்பந்தப் பட்ட அதிகாரி இந்த நடவடிக்கையை கைவிடாது போனால் இவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்றார் என்ற தகவலுடன்  அவரது பெயர் விபரமும் அக்கட்சியின் பெயர் கட்சி தலைவரது பெயரும் கல்முனை நியூஸ் இணையத்தளத்தில் அம்பலப் படுத்தப் படும் .


கருத்துரையிடுக

 
Top