கல்முனை மாநகர சபையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு படையினருக்கான விசேட பயிற்சி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை இப்படையினருக்கு ஒரு வார கால விசேட பயிற்சியை வழங்கவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில்  நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படைப் பிரிவு 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் அதனை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் அப்படையினரை பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக இந்த ஒரு வார கால பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top