(பி.எம்.எம்.காதர்)

மருதமுனையைச் சேர்ந்த  நிர்வாக சேவை அதிகாரி எம்.எம்.நௌபல் எழுதிய “பொது நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான ஒர் அறிமுகம்” என்ற ஆங்கில நூல் வெளியீடும் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்த உரையும்  அண்மையில்  மருதமுனை பொது நூலக மண்டபத்தில் “ஏ.ஆர்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்த அரங்கில்” நடைபெற்றது.
முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும்  சிரேஷ்ட சட்டத்தரணியுமான  எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது அதன் பின் இந்த நூல் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் நூலின் உள்ளடக்கம் பற்றி உரையாற்றினார்.
எழுத்தாளர் சத்தார் எம்.பிர்தௌஸ்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் இந்த நூல் பற்றிய அறிமுக மற்றும் ஆய்வுரை என்பவற்றை நிகழ்த்தினார்கள்.ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் பற்றிய ஞாபகார்த்த உரையை நிகழ்த்தினார்.நூலாசிரியர் எம்.எம்.நௌபல் ஏற்புரை நிகழ்தினார்.
நூலின் முதல் மூன்று பிரதிகளையூம் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயூதீன்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகரப்,ஆசியா மன்றத்தின்  நிகழ்ச்சி; திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி  எம்.எஸ்.எம்.ஜெமீல்இ வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்,கலாநிதி ஏ.ஏ.நுபைல் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.அறிவிப்பாளர் எம்.ஏ.நஸ்றுத்தீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கருத்துரையிடுக

 
Top