தமிழ் சி.என்.என் ஊடக வலையமைப்பின் கிழக்கு மாகாண அலுவலகம் கல்முனை மாநகரில் தமிழ் சி.என்.என் பசி ஒழிப்பு உலக மன்றத்தின் Hunger Free World Foundation நிறுவனருமான திரு அகிலன் முத்துக்குமாரசாமி முன்னிலையில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் சி.என்.என் கிழக்கு பிராந்திய இணைப்பாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இடம்பெற்ற இவ் அலுவலக திறப்பு விழாவுக்கு அதிதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், மா. நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளா் கலாநிதி எம்.கோபாலரெட்ணம், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள், மௌலவி இர்பான், அம்பாறை மாவட்ட சர்வமத சம்மேளன தலைவர் டாக்டா் எம்.ஐ. ஜெமில், உதவிக்கல்விப் பணிப்பாளா் ஏ.ஆப்தின், சமாதானக் கல்வி இணைப்பாளர் அச்சு மொகமட், அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர் கே.ஜெயசிறில், காரைதீவு மணிமண்டப செயலாளா் எஸ்.தங்கவேல், வைத்திய அதிகாரி கே.ஞானரெட்ணம், கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சித்தலைவர் ஏ.அமிர்தலிங்கம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்துல் கபார், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் வி.பிரபாகரன், கவிஞர் முகில் வண்ணன், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ சி.என்.என் பணிப்பாளருக்கு அவரின் சேவையினை பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனால் மணி மகுடம் சூட்டி பொன்னாடை போர்ததப்பட்டு பாராட்டும் வழங்கப்பட்டது.
அதிதிகள் உரையினைத் தொடர்ந்து தமிழ் சி.என்.என் அலுவலக முகாமையாளர் பு.கேதீஸ் நன்றி உரை வழங்கினார்.கருத்துரையிடுக

 
Top