தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு " டெங்கை  ஒழிக்க ஒற்றுமையாக ஒன்றிணைவோம் " எனும் தொனிப் பொருளில் நற்பிட்டிமுனையில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப் பட்டது .

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதொச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம். முபீதின் பணிப்புரைக்கமைவாக  அல் - கரீம் நெசவாளர்  மற்றும் கைத்தொழில் சமூக சேவைகல் அமைப்பினரால்  நற்பிட்டிமுனை  அரச ஆயுர்வேத வைத்திய சாலை வழாகம் ,தையல் பயிற்சி நிலைய வழாகம் ,நெசவு பயிற்சி நிலையம் ,நெசவு பயிற்சி போதனா நிலையம்  மற்றும் பிரதேச வடிகான்கள் சுத்தம் செய்யப் பட்டன .

இந்த நிகழ்வுக்கு  அமைப்பின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை  அமைச்சின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.ஹலீம் ,அமைப்பின்  செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,மற்றும் அமைப்பின் அணைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top