கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு    செய்யப்பட்ட மகளீர்களுக்கான வீடமைப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும்,  மகளீர் கெளரவிப்பு நிகழ்வுகள்  நேற்று(24) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் விஷேட விடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  தெரிவு செய்யப்பட்ட 6 மகளீர்களுக்கான விடமைப்பு   சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், பிரிவுரீதியாக இனம்கானப்பட்ட 31 வீரமகளீர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

திவிநெகும முகாமைதுவப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில் திவிநெகும பிரதேச அதிகாரி எ.ஆர்.எம். சாலிஹ் பிரதம அதிதியாகவும்  திவிநெகும திட்ட முகாமையாளர் எ.சி. அன்வர், மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ். சைலஜா, திவிநெகும  முகாமையாளர்களான எஸ்.சதீஸ், எம்.எம்.எம். முபீன், வங்கி உதவி முகாமயாளர்களான எஸ்.எல்.ஏ.அசீஸ் , ஏ.எம்.நாசீர் ,அலுவலக அதிகாரி பி. மாஜிதா, கலாசார உதவியாளர் எஸ்.அகிலா பானு, திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகதர் என்.எம். நெளசாத் ஆகியோர்கள் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொன்டனர்.

கருத்துரையிடுக

 
Top