காரைதீவு பிரதான வீதியில் (காரைதீவு மதுபான சாலைக்கு முன்பாக) இன்று  (12) இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமுற்ற நிலையில்
கல்முனை அஷ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் AAD-5482 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியும், BAY-1430 எனும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதனாலையே இவ்விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே வேளை குறித்த பிரதேசத்தில் காணப்படும் மதுபானசாலைக்கு முன்னால் அதிக தடவைகள் வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top