நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்துக்கு பாட சாலையின் பழைய மாணவனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர்   காங்கிரஸ் அமைப்பாளருமான   சி.எம். ஹலீம்  ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களை இன்று அதிபர் ஆசிரியர்களிடம் கையளித்தார் .
பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் இன்று காலை காலை ஆராதனை கூட்டத்தில்  இடம் பெற்ற நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர்   காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம். ஹலீம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார் . 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர்   காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம். ஹலீம்  அங்கு உரையாற்றிய போது  இப்பாட சாலைக்கு  அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் அவரது பெயரில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளேன் விரைவில் அது நிறைவேற்றப் படும் என தெரிவித்தார் .

பிரதி அதிபர்  வீ.மொகம்மட் ஸம் ஸம் உதவி அதிபர் ஏ.எம். முனாசிர் ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள். பாடசாலை வளாகத்தில் மரக்கறி விதை நடுகை விழாவும் இடம் பெற்றது.

கருத்துரையிடுக

 
Top