(அகமட் எஸ். முகைடீன்)

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை கனிந்து  வந்த தருணங்களில்  இடையூறு விளைவித்து அக்கனவை கானல் நீராக்கிய கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இன்று மார் தட்டி இறுமாப்புடன் அக்கோரிக்கையை  வெண்றெடுக்க ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்திருப்பது அவரின் அரசியல் வங்குரோத்து தனத்தை காட்டுகின்றது என முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

எதிர் வருகின்ற  பாராளுமன்றத் தேர்தலில் குதிப்பதற்கான முன்னேற்பாடாகவே ஜெமீலின் இவ்வறிவிப்பு அமைகின்றது. சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுவதற்கான கோசமாக அவர் அதனைப் பயன்படுத்துகிரார், என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது கடந்த கால வராலாற்றை புரட்டிப் பார்க்கின்றபோது அவர் சாய்ந்தமருதின் அபிவிருத்திகளை தடுத்ததைத் தவிர வேறு எதனையும் செய்திருக்கவில்லை. சாய்ந்தமருதுக்கு ஒன்று நடக்க வேண்டுமானால் அது தன்னால் மாத்திரமே நடக்க வேண்டும் என நினைப்பவர் ஜெமீல். ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஜெமீல் அரசியலுக்கு வந்த காலம் முதல் இன்றுவரை தன்னை வளப்படுத்தியதை தவரி வேறு எதனையும் செய்யவில்லை.

ஊர் தொடர்பான பொது விடயம் என்று வருகின்றபோது அது யார் குற்றியாவது அரிசாக வேண்டும் என்ற நிலைப்பாடு உண்மையான ஊர் பற்றுள்ள அரசியல் வாதிக்கு இருக்க வேண்டும். ஆனால் யார் காலையாவது பிடித்து பிறர் மூலமான, ஊருக்கு நல்லதாக அமைகின்ற, செயல்களை தடுத்தாக வேண்டும், என்ற கொள்கை உடையோர், பலர் எம்மத்தியில் சானாக்கியம் படைத்த அரசியல் வாதிகள், என்ற பகற் கனவில் வாழ்கின்றனர். இதற்கு ஊதாரணமாக எமது சாய்ந்தமருது பீச் பார்க்கின் தற்போதைய அல​ங்கோலத்திற்கு காரணம் ஜெமீல் என்பது ஊர் அறிந்த உண்மை. சாய்ந்தமருது பீச்பார்க்கின் அபிவிருத்திகளை தான் தான் தடுத்ததாக ஜெமீல் பள்ளிவாசல் மரைக்காயர் சபையிடம் ஒப்புக் கொண்டுள்ளார் என்ற செய்தியினை இத்தறுனத்தில் மக்களுக்கு தெரியப்படுத்தியாக வேண்டும்.    
  
சாய்ந்தமருதுக்கு அரசியல் அதிகாரம் வருவதாக இருந்தால் அது தன்னால் மாத்திரமே வரவேண்டும் என்று நினைப்பவர்தான் ஜெமீல். அது முதல்வர், முதலமைச்சர், அமைச்சர் என்று எவ்வாறான அதிகாரமாக இருந்தாலும் அது தன் மூலமே இவ்வூர் பெற வேண்டும் என்ற கோட்பாடுடையவர். தனக்கு என்று வரும்போது, சாய்ந்தமருதுக்கு என்ற கோசத்தை எடுத்துக் கொள்கிரார் இவர். வேறு ஒரு சாய்ந்தமருது மகன் மூலம் அவ்வதிகாரம் வருகின்றபோது அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறார். கடந்த காலத்தில் எனது முதல்வர் நியமனத்தின் போது “எனது மையத்தின் மீதே முதல்வர் நியமனத்தை பெற முடியும்” என ஜெமீல் குறிப்பிட்டிருந்தார். சாய்ந்தமருதின் அரசியல் அபிலாசைகளுக்காக முன்னின்று நான் அன்று உழைத்தபோது என்னை  ஒரு பிரதேச வாதம் கொண்ட நபராக இந்த ஜெமீல் அடையாளப்படுத்தினார். இதனை ஒருபோதும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு அரசியல் வாதியும் தன்னால் முடியுமானதை போட்டி போட்டு செய்கின்றபோது எமது ஊர் எங்கோ சென்றுவிடும். ஆனால்  போட்டி போட்டு தடுப்பதற்கே எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவ்வாறான சகுனிகளின் அரசியல் கலாச்சாரத்தைக் மக்கள் இனம் கண்டு அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

மெதுவாக நகர்ந்து வந்த வாகனத்தில் படுவதற்கு முன்பே விழுந்து அழும் பிச்சைக் காரன்போல், ஜெமீல் எல்லாவற்றையும் இழந்த்தாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். அவ்வாறில்லாமல் உண்மைக்கு உண்மையாக இதய சுத்தியுடன் செயற்பட்டு சாய்ந்தமருதின் உள்ளூராட்சி மன்றக் கனவை நனவாக்க முயற்சியுங்கள். அரசியல் நாடகத்திற்காகவோ, சுய அரசியல் பிழைப்பிற்காகவோ உன்னதமான இலக்கை நோக்கிய நகர்வை ​கொச்சைப்படுத்தி நழிவடையச் செய்யாதீர்கள். ​

கருத்துரையிடுக

 
Top