நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய  மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய  முன்பள்ளி ஆராதனை மண்டபத்தில் இன்று நடை பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  கல்முனை தொகுதி  இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம். ஹலீம்  அனுசரணையுடன்  மலர் இணைய  வானொலியின்  ஏற்பாட்டில் நடை பெற்ற  இந்த ஊடக கருத்தரங்கில் மலர்  இணைய  வானொலியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எப்.எம்.ஷரீக்  பிரதான வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊடகம்  தொடர்பான விரிவுரை வழங்கினார் .

நிகழ்வில்  கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய முன்னாள் அதிபருமான எஸ்.எம்.ஏ. ஜஹுபர்  பிரதம அதிதியாகவும், இலங்கை மின்சார சபை கல்முனை பிராந்திய மின் அத்தியட்சகருமான கே.சம்பந்தன் கௌரவ அதிதியாகவும் மற்றும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்  உட்பட  ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .

ஊடக பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு  அதிதிகளால் சான்றிதழ்  வழங்கப் பட்டதுடன்  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய முன்னாள் அதிபருமான எஸ்.எம்.ஏ. ஜஹுபர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  கல்முனை தொகுதி  இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம். ஹலீமால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார் .கருத்துரையிடுக

 
Top