40 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் ஒளடத சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரை காலமும் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாதளவுக்கு மாபியாக்களின் கைகளிலேயே இது அகப்பட்டு இருந்தது. இதனால் நான்கு சதத்துக்கு  விற்க வேண்டிய மருந்து நாற்பது ரூபாய்கு விற்கப்பட்டது. இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கம் நிறைவேற்றியதன் மூலம் மருந்து களின் விலை கணிசமான அளவு  குறையும் என எதிர் பார்க்கப் படுவதாக சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி தெரிவித்தார். 

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோயில், பொத்துவில் ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாட சாலை அதிபர்களுக்கான  உணவு  பாதுகாப்பு மற்றும் போசாக்கு சம்பந்தமான ஒரு நாள் விழிப்பூட்டல் கருத்தரங்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (09) இடம் பெற்றது. 

சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹஸனலியின் பணிப்புரை க்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர். டாக்டர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் ஹஸனலி மேற் கண்ட விடயத்தை தெரிவித்தார். இக்கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட பாடசாலை அதிபர்களும், வைத்தியர்களும்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பங்குபற்றியிருந்தனர். 

இக்கருத்தரங்கில் பங்குபற்றிய அனைவருக்கும் அமைச்சரினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் அமைச்சருக்கு பொன்னாடையயும் போர்த்தி கௌரவித்தனர் .கருத்துரையிடுக

 
Top