பொது பலசேனா அமைப்பின் ஆறு பிக்குகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு  பிரப்பிக்கப்பட்டுள்ளது கொழும்பு கோட்டே நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .
அமைச்சர் ரிஷாத் பதியூத்தினின் அமைச்சுக்குள்  அத்து மீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 2ல் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மீது இந்த பௌத்த பிக்குகள் அத்து மீறி பிரவேசித்தனர் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது .
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில்ஆஜராகுமாறு  குறித்த பௌத்த பிக்குகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜித தேரர் குறித்த அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்து, பொதுபல சேனா பௌத்த பிக்குகள் அமைச்சை  முற்றுகையிட்டிருந்தனர்.சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பௌத்த பிக்குகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த தேரர்களை அடையாளம் காணமுடியாது உள்ளது என பொலிசார் நீதி மன்றத்தில் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top