கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் ஏழாம் கட்டத்தினூடாக பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை (21) மாலை மாகாண சபை உறுப்பினரின் கல்முனை அலுவலகத்தில் நடை பெற்றது 

தேர்தல்  காலங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாகுக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘வாழ்வின் ஒளி’ வாழ்வாதார உதவிகள் வழங்கும்  செயற்றிட்டத்தின் கீழ் பிரதேச ரீதியாக மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் கண்டறியப்பட்டுஇ அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் ஏழாம் கட்ட வைபம்  சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின்(சிடா-ஸ்ரீலங்கா) அனுசரணையூடன்  “ஒருமைப்பாட்டினூடான அபிவிருத்தியின் மூலம் சமூகத்தின் வளமான வாழ்வூக்கு வலுவூட்டுவோம்” எனும் கருப்பொருளில் நடை பெற்றது.
இதன்போது பயனாளிகளுக்கு இலவச குடி நீர் இணைப்பு மற்றும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இ பாதணிகள்  என்பன வழங்கி வைக்கப் பட்டன 
கிழக்கு மாகாண சபை உறுப்பினா; சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் அப்துல் மஜீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  மற்றும்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறகதுல்லாஹ் ,ஏ.பசீர்,ஏ.எம்.பிர்தௌஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top