ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்க தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் அத்தநாயக்கவை பங்கேற்கச் செய்ய அனுமதிக்குமாறு கோட்டே நீதவான் திலின கமகே, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் அத்தநாயக்க பங்கேற்க அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top