கல்முனை மாநகரின் முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்று அணி ஒன்றில் இணையவுள்ளதாக நம்பகமாக தெரிய வருகிறது.
சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு உறுப்பினரும் மருதமுனையை சேர்ந்த  மற்றொரு மாநகர சபை உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி மாற்று அணியில் இணைய திட்டமிட்டுள்ளனர்.
இந்த இருவரும் கட்சி மாறுகின்ற போது கல்முனை மாநகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் ஆட்சி செல்லும் வாய்ப்பு உள்ளது.
ஹக்கீமின் தான்தோன்றித்தனமான முடிவே இக்கட்சி மாறும் படலம் எனவும் மருதமுனையை சேர்ந்தவர் பிரதி மேயர் பதவிக்கு தன்னை நியமிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top