---------------------------------------------------------------------------
அனைத்தையும் அம்பலப்படுத்தும் ஜெமீல்
---------------------------------------------------------------------------
கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் கருத்துகளைப் பறிமாறினார். பல விடயங்கள் அவரால் கூறப்பட்டது. இருப்பினும் கட்சியின் நலன் கருதி நான் சில விடயங்களை தணிக்கை செய்து கொள்ள விரும்புகிறேன்.
அவர் கூறிய சில விடயங்களை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------

1.ஹாபிஸ் நஸீரை கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்வதற்கான இணக்கக் கடிதத்தை முதலில் வழங்கியவர் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம். அவர் நேற்றுக் காலை 6.30 மணிக்கு அமைச்சர் ஹக்கீம் அவர்களின் வீட்டுக்குச் சென்று தனது இணக்கக் கடிதத்தை கையளித்திருந்தார்.
2. வடமாகாண சபையின் முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டுமென்று கல்முனை மாநகர சபை மேயரான நிஸாம் காரியப்பர் அண்மையில் என்னிடம் தெரிவித்தார். அவர் கூறியது எனது மனதை மிகவும் பாதித்தது எனவே, அவரும் இந்த விடயத்தில் பின்புலனாக இருந்து செயற்பட்டவர்.
3. தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் எமது கட்சியின் முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு பல அழைப்புகள் வந்தன. நான் அவற்றை நிராகரித்தேன்.
4. ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக்கி கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை நீங்கள் இருந்து பாருங்கள். கடைசி வரையும் நான் விடப் போவதில்லை என்றும் ஜெமீல் என்னிடம் தெரிவித்தார்.
ஜெமீல் கூறிய அனைத்து விடயங்களும் என்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அசாதாரண நிலைமைகள் தோற்றுவிக்கப்பட கூடாது என்ற அடிப்படையில் பல விடயங்களை வெளியிடுவதனை தவிர்த்துக் கொள்கிறேன்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கருத்துரையிடுக

 
Top