ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்  கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது  சற்று முன் அமைச்சர் ஹக்கீம் அவர்களினால் அந்த இடைநீக்கத்தை நீக்கியுள்ளார். 
சென்ற 6ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தினார்.
இதனடிப்படையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு தற்பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இடம்பெற்றுக்கொண்டிக்கின்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், தான் செய்த பிழைகளை மண்ணிக்கும்படி தலைவர் அவர்களிடம் ஏ.எம் ஜெமீல் அவர்கள் மன்னிப்புக்கோரி, தலைவர்கள் அவர்கள் அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு மீண்டும் கட்சியம் நடவடிக்கைகளை ஏ.எம் ஜெமீல் ஆரம்பித்துள்ளார். 

கருத்துரையிடுக

 
Top