சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் என்பவற்றுக்கு விஜயம் செய்தார்.
சாய்ந்தமருது வைத்தியசாலை நிகழ்வு அதன் பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் அடங்கிய மகஜர் ஒன்று வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரினால் சுகாதார ராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வைத்தியசாலை நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்கும் விஜயம் செய்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உள்ளிட்ட அதிகாரிகளினால் அவர் வரவேற்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

 
Top