கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் சதோச  நிறுவனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளராக  நட்பிட்டிமுனையை சேர்ந்த  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  பிரதி அமைப்பாளரும்  கட்சியின் உயர் பீட உறுப்பினருமான  கரீம் முஹம்மத் முபீத்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான  றிசாத்  பதியுதீன் அவர்களால் நியமிக்கப் பட்டுள்ளார் .
இவருக்கான நியமனக் கடிதம் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சில் வைத்து அமைச்சரினால் வழங்கி வைக்கப் பட்டது .  இந்நிகழ்வில்  கல்முனை தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர்   காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம். ஹலீமும்  கலந்து கொண்டார். 

கருத்துரையிடுக

 
Top