இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில்  சுகாதார ராஜாங்க அமைச்சர்  எம்.ரி.ஹசன் அலி,  கல்முனை மாநகர  முதல்வர்  எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதே வேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும்  இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். 

கருத்துரையிடுக

 
Top