கடந்த 29ம் திகதி (29.01.2015) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவே இதன்போது எதிராக வாக்களித்தவராவார். 

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, கீதாஞ்சன குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 

கருத்துரையிடுக

 
Top