கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (10)  திருகோணமலை உட்துறைமுக வீதியலமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களினால் 2015 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத்திட்டம் முன்மொழியப்பட்டது.
குறித்த வரவுசெலவுத்திட்டம் அமோக ஆதரவுடன் நிறைவேறியது.  இதன் காரணமாக பல தடவை கிழக்கு மாகாண சபை கூடியும் நிறைவேற்ற முடியாமல் இருந்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்பார்த்ததை விடவும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர், 04 அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணையை முன்வைத்த  போது கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளும் இதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் இதுவரை நியமிக்கப்படாமையால் குறித்த அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை முதலமைச்சரே முன்மொழிய வேண்டியேற்பட்டது.

கருத்துரையிடுக

 
Top