கிழக்கு மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை  சந்திரகாந்தன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அரச தரப்பு தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் சிவநேசத்துரை  சந்திரகாந்தனும், அவருடன் புதிதாக இணைந்துள்ள புஸ்பகுமாரும் (இனியபாரதி)  நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது

கருத்துரையிடுக

 
Top