“புதியமாற்றத்துக்கானநிர்மாணமும் நகர்வும்” என்ற தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்தினை சேர்ந்த சுமார் நூறுக்கு மேற்பட்ட புத்திஜீவிகள் சந்திப்பொன்று பெப்ரவரி 22 , 2014 ஆம் திகதி கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலீலுர் ரஹ்மான் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறுதுறைசார் புத்திஜீவிகளான, கல்வியலாளர்கள், தனவந்தர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் என்று பலரும் கலந்து கொண்டு மிகக் காத்திரமான கருத்துப் பரிமாற்றல்களையும், தீர்மானம்களையும், மேற்கொண்டனர்.
மறைந்த தலைவர் எம். எச். எம் அஷ்ரப் அவர்களுக்கு பிந்திய கடந்த 15 வாருடம்களாக அபிவிருத்தி என்றாலும்சரி சமூக அரசியல் தலைமைத்துவம்என்றாலும்சரிமிக நீண்ட வெற்றிடம் காணப்படுவதாக மக்கள் அங்கலாய்ப்பது அனைவரும் அறிவோம்.
இந்நிலையினை போக்குவதற்காக கல்முனையில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் வாழும் அக்கறையுள்ள புத்திஜீவிகள் ஒன்றுபட்டு முஸ்லிம்களின் தலைநகரை, தலைநகரின் அந்தஸ்துக்கு நிலைப்படுத்த அரசியல்,கல்வி, பொருளாதாரம், மீன்பிடி, விவசாயம், ஒழுக்கவிழுமியங்கள்போன்ற இன்னோரன்ன துறைகளை அவசரமாக அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், கல்முனையை நோக்கி படையெடுக்கும் அரசியல் வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இவ் அவசியத்தினை வலியுருத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இபிராந்தியத்தில் இயங்கிவரும் சமூக அமைப்புக்கள், கழகங்கள், தொண்டு நிருவனங்கள் மற்றும்சமூக ஆர்வலுள்ள தனி நபர்கள் எல்லோரையும் உள்வாங்கியதானதிடகாத்திரமான மக்கள் நிறைவேற்று சபை ஒன்றினை நிறுவி, அதன்மூலமாகஇச்செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top