சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹசன் அலி நாளை 23.02.2015ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபைச் செயலாhளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார். 

புதிய அரசாங்கத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி நியமிக்கப்பட்டதன் பின்னர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு முதற்தடவையாக விஜயம் செய்யவுள்ள அமைச்சருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதன்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்தல் தொடர்பாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். 

சுகாதார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி நியமிக்கப்பட்டதையிட்டு வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இணைந்து அமைச்சரை கௌரவிக்க உள்ளதாகவும் வைத்தியசாலை அபிவிருத்திச் சபைச் செயலாhளர் றியாத் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார். 

அமைச்சரின் இவ்விஜயத்திற்கான ஏற்பாடுகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் மேற்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

 
Top