கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரை இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் தெரிவிப்பேன் என மருதமுனையில் நடை பெற்ற கட்சி மாவட்டக் குழுக் கூட்டத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அறிவித்திருந்தார் . அவரால் வழங்கப் பட்ட நேரம் முடிவடையும் தருவாயில் உள்ளது . தலைவரின் முடிவு  இன்று நள்ளிரவு வெளியாகும் என கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்திருந்தார் .

இதனிடையே மீண்டும் ஊர்வாத செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன . முதலமைச்சருக்கான  தெரிவில் மூவரின் பெயர்கள்  மக்களால் பேசப் படுகின்றது. தலைவரின் தீர்ப்பு தாமதமாகிக் கொண்டு சென்றால்  இந்த முதல்வர் தெரிவின் பின்னரும் கடையடைப்புகள் ,ஹர்த்தால்கள் நடை பெறலாமென்ற அச்சம் மக்களிடம் காணப் படுகின்றது . 
ஆட்சியை நாம்தான் அமைப்போம் என்று கூறிய அன்றைய தினமே முதலமைச்சர் யார் என்பதையும் தலைவர் கூறியிருந்தால் எல்லாம் சுமுகமாய் முடிந்திருக்கும் . இழுத்தடிப்பு தலைவருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் செயலாகும் என்று புத்திஜீவிகள் கருதுகின்றனர்.
முதலமைச்சர் தேர்வில் சம்மாந்துறைக்கு முதலிடமும்,சாய்ந்தமருதுக்கு இரண்டாமிடமும் ,ஏறாவூருக்கு மூன்றாமிடமும் உள்ளதாக இரகசிய தகவல்  கசிந்துள்ளது .
எவ்வாறெனினும்  முதலமைச்சரை இம்முறை அம்பாறை மாவட்டத்துக்கே வழங்க வேண்டும் எனவும் , வழங்கப் படும் எனவும் பெரும்பாலான அம்பாறை மாவட்ட மக்கள்  பேசிக் கொள்கின்றனர் 

கருத்துரையிடுக

 
Top