(அப்துல் அஸீஸ்  )

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற மற்றும் இடம்மாறிச் சென்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளுடனான  உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடலும் இன்று ( 26 ) அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலாளர், திவிநெகும மாவட்ட பணிப்பாளர்  உட்பட கல்முனை பிரதேச செயலகபிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற உத்தியோகத்தர்கழும், பொது முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி இடம்மாறிச் சென்றவர்களும்  கெளரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வுகளில் திவிநெகும மாவட்ட பணிப்பாளர் அனுரத்த பியதாஸ, கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி, திவிநெகும பிரதிப் பணிப்பாளர் ஐ.அலியார்  உட்பட கல்முனை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், திவிநெகும முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொன்டனர்.


கருத்துரையிடுக

 
Top