அம்பாறை மாவட்டத்தில் பெளத்த விஹாரைகளுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கபட்டுள்ளது என காணி அமைச்சர் எம் .கே .டி .எஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் .
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகளினால் இவ்வாறு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளை அச்சுறுத்தி காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகள் தங்களது நெருக்கமானவர்களுக்கு சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிக்க வழங்கப்பட்டுள்ளது பௌத்த பிக்குகளை ஆயுதம் காட்டி அச்சுறுத்தி விஹாரை காணிகளில் இருந்தவர்களின் வீடுகளை எரித்தே காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
பலவந்தமான அடிப்படையில் ராஜபக்ச அரசாங்கம் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகளை அபகரித்துக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படாத காரணத்தினால் இந்த அனைத்து குற்றச் செயல்களும் மூடி மறைக்கப்பட்டன.
பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள பௌத்த விஹாரை காணிகளில் இதுவரையில் 22 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தி காணிகள் மீள பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top