ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. -
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சத்தியப் பிரமாணம் செய்யும் வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது

கருத்துரையிடுக

 
Top