கல்முனை வலயக்கல்வி அல்லுவலகத்தில்  2015 புதுவருட தின நிகழ்வுகள் வலயக்கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இன்று (01.01.2015) நடைபெற்றது.
.சகல உத்தியோகத்தர்களும் வலயக்கல்விப் பணிப்பாளர்  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

தமிழ் மொழி மூலம் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். கலீல்  சத்தியப்பிரகடனத்தை கூற தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த வருடத்தில் வலயக்கவிப் பணிமனையில்  செயற்படுகின்ற சகல திணைக்களங்களும் சிறப்பாக செயற்பட்டதாகவும் இதற்கு உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பிரதானமானது என்றும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்கள் சார்ந்த தொழிலின் சேவைகளை இவ்வருடமும் சிறப்பாக செய்ய வாழ்த்துவதாகவும் இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  மயில் வாகனம்,அரபாத் முகைதீன், அப்துல் ரகீம் ,கணக்காளர் சாலிதீன்,பொறியியலாளர்  அருண், நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜி.பரம்சோதி   உட்பட  உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.


கருத்துரையிடுக

 
Top