கடந்த அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப் பட்டிருந்த சடயந்தலாவாய்க் கண்ட 10 ஆயிரம் ஏக்கர் நெற்காணிக்கான நீர்ப்பாசனம் நீர்ப்பாச பிரதி அமைச்சர் அனோமா கமேக்கயின் அதிரடி உத்தரவுக்கமைய இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் நீர்பாசனம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தமையினால் விவசாயத்தைக் கைவிடும் நிலையில் இருந்தனர். கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பாளரும், பாதுகாப்பு அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எச்.எச்.ஏ நபாரின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்த போது அவர் பிரதி அமைச்சரை தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியதற்கமைய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே உடனடியாக விவசாயிகளுக்கான நீர்பாசனத்தை திறந்து கொடுக்குமாறு மாநகர சபை உறுப்பினரை கேட்டுக் கொண்டார்

பிரதி அமைச்சரின் கட்டளைக்கமைய அவ்விடத்துக்குச் சென்ற மாநகர சபை உறுப்பினர் நபார் நீர்பாசன பொறியியலாளரை அவ்விடத்துக்கு அழைத்து தடுத்து வைக்கப் பட்டிருந்த நீர்ப்பாசனத்தை திறந்து விவசாயிகளுக்கு தேவையான அளவு  நீரை வழங்க நடவடிக்கை எடுத்தார். 
கருத்துரையிடுக

 
Top