சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் பூரண சுகம் பெற வேண்டி விஷேட துஆப்பிராத்தனை நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிட கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன உப தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்த துஆபிராத்தனை நிகழ்வில் முஸ்லிம், தமிழ் ஊடகவியலாளர்கள் பெருந்தொகையில் கலந்துகொண்டதுடன். நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் சிறப்பு  அதிதியாகவும் கலந்து கொண்டார்.

நிந்தவூர ஜூம்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.எஸ் அப்துல் ரசீத் மௌலவி  விஷேட துஆ பிராத்தனை செய்தார்.


கருத்துரையிடுக

 
Top