எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடைய தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்முனை அலியார் வீதியில் தேர்தல் செயலகம் நேற்று (03) பிரபல வர்த்தகர் ஏ.எம்.பைரோசுடைய அழைப்பின்பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே பிரதம அதிதியாகக் கலந்து திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். 

நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.ரசாக் மற்றும் வைத்தியர் வை.எல்.யூசுப் மற்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் போன்றோரும் பெரும் திரளான அபிமானிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top