(பி.எம்.எம்.ஏ.காதர்)
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று  மாலை (03-01-2015) தொடக்கம் நள்ளிரவு  தாண்டி 12.45 மணிவரை மருதமுனை கடற்கரை வீதியில் நடைபெற்றது.
மருதமுனை மத்திய குழுவின் தலைவரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், முன்னாள் நீதி அமைச்சருமான  பாராளுமன்ற உறுப்பினர் றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ்,கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, பைசல் காசிம் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, மருதமுனை மத்திய குழுவின் செயலாளர் அபுல் ஹக்கீம் ஆசிரியர்,இளைஞர் அணித் தலைவர் சரோ தாஜூதீன் ஐ.எல்.எம். மாஹிர் உட்பட கட்சி முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர். கருத்துரையிடுக

 
Top