மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் அனைவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவி விலகுமாறு அரசாங்கம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ஒவ்வொரு மாகாணசபைகளும் தற்போது ஆளும்கட்சி வசம் வந்துகொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் ஆளுநராக வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாகாணசபைகளுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 

இதன்பிரகாரம் கிழக்கு மாகாண ஆளுநராக எஸ்.எஸ்.பி. மஜீத் அல்லது முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் நியமிக்கப்படலாம் என எதிர்வுகூறப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top