மஹிந்த ராஜபக்ஷ  அமோக வெற்றியீட்ட இறைவனை பிரார்த்திக்கும் பஸீர் 

கட்சிக்கு கட்டுப்பட்டே வெளியேறியதாக ஜனாதிபதிக்கு கடிதம்நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறை வனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை கொண் டுள்ளதாகவும் கட்சி யின் முடிவுக்க மைவாகவே தான் வெளியேறுவதாகவும் முன்னாள் அமைச்சர் பiர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பiர் சேகுதாவூத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசிலிருந்து வெளியேறினார். தாம் வெளியேறி யமைக்கான காரணங்களை ஜனாதிபதி மஹிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளதாக குறிப் பிட்டுள்ள அவர் முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய் யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் இராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவே தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையையிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பiர் சேகுதாவூத் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top