ஊடகவியலாளர் இப்றான்சா பொறுத்தீனை ( பௌமி) பிரதம ஆசிரியராகக் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவரும் "நிஜம்" சஞ்சிகையின் இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா கிழக்கிலங்கையைச் சேர்ந்த அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

 பிரபல சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.
 இந்த வெளியீட்டு விழாவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பிரதம அதிதியாகவும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் சிறப்பு அதிதியாகவும்  கலந்துகொண்டனர். 
எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்த விழாவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட அரசியல்துறை விரிவுரையாளர் எம்.எம்.காசில் சஞ்சிகையின் விமர்சன உரையாற்றினார்.


கருத்துரையிடுக

 
Top