ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்­ள­துடன் புதிய அமைச்­ச­ர­வையும் பத­விக்கு வந்­துள்­ளது. இந்த நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வச­மி­ருந்த மாகாண சபை­களின் ஆட்சி அதி­கா­ரங்­களும் மாறி வரு­கின்­றன.
இதன் முதற்­கட்­ட­மாக ஊவா மாகாண சபை ஐக்­கிய தேசியக் கட்சி வசம் வந்­துள்­ளது. ஊவா மாகாண சபையில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பதவி வகித்த ஐ.தே.க.வின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று முன்­தினம் முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்­றுள்ளார். ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்­தியூ முன்­னி­லையில் இந்தப் பத­வி­யேற்பு நிகழ்வு இடம்­பெற்­றி­ருக்­கின்­றது.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தை­ய­டுத்தே இந்த அதி­கார மாற்றம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஊவா மாகாண ஆளு­நரை சந்­தித்த ஹரீன் பெர்னாண்டோ தமக்கு பெரும்­பான்மை பலம் இருப்­ப­தனை நிரூ­பித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே புதிய முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்­ப­தற்கு ஹரீன் பெர்­னாண்­டோ­வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

ஊவா மாகாண சபையைத் தொடர்ந்து வடமேல் மாகாண சபையின் முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து வடமேல் மாகாண சபையும் ஆளுந்­த­ரப்பின் வசம் வந்­துள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாகாண சபையில் செய்­தி­யாளர் மாநாடு நடத்­திய முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆளுந்­த­ரப்­புக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்­திய மாகாண சபை­யிலும் ஆட்சி மாற்றம் ஏற்­ப­­டுவதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எதிர்­வரும் வாரம் மத்­திய மாகாண சபையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்கி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வுள்­ளனர். இந்­த­நி­லையில் கிழக்கு மாகாண சபை­யிலும் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

மேல் மாகாண சபையின் ஆட்­சியை மாற்­று­வ­தற்கும் தற்­போது நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பக்கம் மாற்ற செயற்­பா­டுகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
37 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் அண்­மையில் இடம்­பெற்ற கட்சி தாவல்­க­ளினால் எதி­ர­ணியில் தற்­போது 27 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் 11 உறுப்­பி­னர்­களும் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் 8 உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் 5 உறுப்­பி­னர்­களும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் 2 உறுப்­பி­னர்­களும் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாக ஒரு உறுப்­பி­னரும் உள்­ளனர்.
கிழக்கில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­மு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி ­யுள்ளனர். நேற்று முன்­தினம் கொழும்பில் இந்தப் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றி­ருக்­கின்­றது.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியும் ஒன்­றி­ணை­வது அவ­சி­ய­மாகும். கிழக்கு மாகாண சபை தேர்­த­லின்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணயில் அங்கம் வகித்­தது. இதன்­போது மாகாண சபைத் தேர்­தலில் தம்­முடன் இணைந்து போட்­டி­யிட வரு­மாறு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முஸ்லிம் காங்­க­ரஸுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. ஆனால் இந்த அழைப்பை நிரா­க­ரித்த முஸ்லிம் காங்­கிரஸ் இந்­தத்­தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்­டி­ருந்­தது. தேர்­த­லின்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது 11 உறுப்­பி­னர்­க­ளையும் முஸ்லிம் காங்­கி­ர­ஸா­னது 8 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டன.

தேர்தல் முடி­வு­க­ளை­ய­டுத்து கிழக்கு மாகாண­ச­பையில் ஆட்­சி­ய­மைக்க ஒன்­றி­ணை­யு­மாறு முஸ்லிம் காங்­கி­ரஸுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. மாகாண சபையின் முத­ல­மைச்சர் பத­வியை வழங்­கு­வ­தற்கு தயார் என்றும் கூட்­ட­மைப்பு அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் அதற்கும் உடன்­ப­டாத முஸ்லிம் காங்­கி­ர­ஸ் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து கிழக்கில் ஆட்­சி­ய­மைத்­தது. இத­னை­ய­டுத்து முத­ல­மைச்­ச­ராக ஐ.ம.சு.மு. வைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீத் நிய­மிக்­கப்­பட்டார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் கிழக்கு மாகாண ஆட்சி தொடர்பில் ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தத்தில் இரண்­டரை வரு­டங்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி முத­ல­மைச்சர் பத­வி­யினை வகிப்­ப­தென்றும் அடுத்த இரண்­டரை வரு­டங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முத­ல­மைச்சர் பத­வி­யினை வகிப்­ப­தென்றும் இணக்கம் காணப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலை­யி­லேயே தற்­போது மத்­திய ஆட்சி மாறி­யுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதி­கா­ரமும் மாற இருக்­கின்­றது.
இந்த விடயம் தொடர்­பி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­ன­ரையும் கூட்­ட­மைப்­பினர் சந்­தித்து பேசி­யுள்­ளனர். நேற்று மீண்டும் சந்­தித்துப் பேசவும் ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. ஆனாலும் கிழக்கு மாகாண சபை ஆட்­சியைக் கைப்­பற்றும் விட­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டையில் தற்­போது சிறு முரண்­பாடு காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதி­காரம் மாறு­மி­டத்து முத­ல­மைச்சர் பத­வி­யினை யாருக்கு வழங்­கு­வது என்­பது தொடர்பில் இழு­ப­றி­நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. கிழக்கில் ஆட்சி மாறு­மி­டத்து தமக்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று கூட்­ட­மைப்பு கோரி­யி­ருக்­கின்­றது. ஏனெனில் பெரும்­பான்மை ஆச­னங்­களை கூட்­ட­மைப்பே கொண்­டுள்­ள­மை­யினால் இவ்­வாறு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்கை எழுந்­துள்­ளது. ஆனால், முன்னர் தெரி­வித்­த­தைப்­போன்று முத­ல­மைச்சர் பத­வியை தமக்கு வழங்­க­வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கிரஸ் கோரி­வ­ரு­வ­தாக தெரி­கின்­றது.
கிழக்கு மாகா­ண­சபை ஆட்சி கைமா­று­வதைப் பொறுத்­த­வ­ரையில் சிறு­பான்மை இன மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் எந்­த­வ­கை­யிலும் முரண்­ப­டக்­கூ­டாது. யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு முன்னர் முஸ்­லி­ம்க­ளுக்கும் தமிழ் மக்­க­ளுக்­கு­மி­டையில் முண்­பா­டான நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. அந்த நிலை தற்­போது படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில் ஒற்­றுமை தழைத்­தோங்கி வரு­கின்­றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட தமிழ், முஸ்லிம் மக்கள் தமது தீர்க்கமான முடிவினை ஒன்றிணைந்து தெரிவித்திருந்தனர். இத்தகைய ஒற்றுமை சகல விடயங்களிலும் நிலவவேண்டியது இன்றியமையாததாகும்.
கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் இருதரப்பினரும் விட்டுக்­கொடுப்பு­களை மேற்கொண்டு சிறுபான்மை இன மக்களுக்கு நன்மையளிக்கத்தக்க தீர்மானங்களை எடுக்கவேண்டும். அதிகாரப் போட்டி, பதவிப்போட்டிக்காக சிறுபான்மை இன மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினரும் செயற்படக்கூடாது. இரு சமூகங்களுக்கிடையேயும் ஒற்றுமை தழைத்தோங்கி வருகின்ற நிலையில் அதனை வளர்ப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தீவிர கவனம் செலுத்தி செயற்படவேண்டிய இன்றியமையாததாகும். 

கருத்துரையிடுக

 
Top